கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் – முதல்வர் நேரில் வாழ்த்து!
திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 89-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளான இன்று அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் துரைமுருகன் மற்றும் கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.