#Breaking:”கொரோனாவிலிருந்து ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன் குணமடைந்து விட்டார்” – மருத்துவமனை தகவல்!

சென்னை:மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடு திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு,அதன்பின்னர் லேசான இருமல் இருந்ததையடுத்து,பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,நவம்பர் 22 ஆம் தேதியன்று அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து,கொரோனா பாதிப்பால் சிசிக்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக நவ.26 ஆம் தேதியன்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளிடப்பட்டது.
இந்நிலையில்,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“கடந்த நவம்பர் 22, 2021 அன்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தது. அவருக்கு லேசான கொரோனா இருந்தது, அதற்காக அவர் சிகிச்சை பெற்றார்.தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார், ஆனால் டிசம்பர் 3, 2021 வரை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4, 2021 முதல் தனது வழக்கமான வேலையைத் தொடர அவர் தகுதியுடையவராக இருப்பார்”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025