மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 53 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை..!

Default Image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதீன மடம் சார்பில் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை நாளை முதல் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கோவில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், தினசரி சாயரட்சை காலத்தில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் அபிஷேகம் செய்தல் மற்றும் நெய்வேத்திய கைங்கரியம் சாயரட்சை கட்டளை மதுரை ஆதீனகர்த்தரால் 1968 வரை நடத்தப்பட்டு வரப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 53 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மதுரை ஆதீனம், 293-ஆவது குருமகா சன்னிதானம், ஆதீனகர்த்தர், ‘சிவஞானபானு’ ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் அவர்களால் மேற்படி விடுபட்ட சாயரட்சை கட்டளையை 01.12.2021 (அதாவது நாளை) முதல் மதுரை ஆதீனம் சார்பாக நடத்தப்படவுள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்