முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை..!
சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
தூத்துக்குடி – நெல்லை சாலையில் வல்லநாடு பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்பதை விட, பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தான் முக்கியம்.
90 நாட்களில் பணிகள் முடிக்கப்படவில்லை எனில் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என தெரிவித்தது. அதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பாலம் சீரமைப்பு பணிகள் 90 நாளில் முடிக்கப்படும் என பதில் தெரிவித்தனர்.