“ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் முதல்வர்;இதுதான் அந்த நடவடிக்கையா? – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
2.27 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது விடியா அரசு என்று ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
வேலுார் மாவட்ட பொதுப்பணித் துறையில் தொழில்நுட்ப கல்விப் பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வந்த ஷோபனா என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கடந்த நவ.3 ஆம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது,அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 2.27 கோடி ரொக்கம்,தங்க நகைகள்,வெள்ளிப் பொருட்கள், பினாமி பெயரிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,ஷோபனா திடீரென திருச்சி மண்டல பொதுப்பணித் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வுடன், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்,வெளிப்படையான,ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் முதல்வர்,கடமை தவறுவோர் மீது தவறாமல் எடுக்கப்படும் நடவடிக்கை இதுதானா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;
“வெளிப்படையான,ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,
மறுபுறம்,2.27 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது விடியா அரசு, இதுதான் அந்த கடமை தவறுவோர் மீது தவறாமல் எடுக்கப்படும் நடவடிக்கையா?,விளம்பர விடியா அரசு”,என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான,ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் @mkstalin
2.27கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது விடியா அரசு,
இதுதான் அந்த கடமை தவறுவோர் மீது தவறாமல் எடுக்கப்படும் நடவடிக்கையா?#விளம்பர_விடியாஅரசு https://t.co/WCeAksdI7B pic.twitter.com/1uzuF03w40— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 30, 2021