#Breaking : கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு …!
தொடர் மழை காரணமாக கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
எனவே, இன்று தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.