‘வெல்க தளபதி… வெல்க உதயநிதி..!’ – நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட திமுக எம்.பி..!

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான மாநிலங்களவை எம்.பி-க்கள் பதவி ஏற்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகிய மூவரும் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார். அப்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது. வெளியில் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025