மீண்டும் வடிவேலுவுடன் அஜித் இணைந்து நடிக்காதது ஏன் தெரியுமா? ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்.!
ராஜா படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதனால் தான் மீண்டும். அஜித் – வடிவேலு கூட்டணி நடைபெறாமல் இருக்கிறது என கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் சில காம்பினேஷன்கள் இனி நடக்கவே நடக்காது என்பது போல சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுவிடும். அந்த சில சம்பவங்களில் சிலவை வெளியில் தெரியும். சிலவை வெளியில் தெரிவதில்லை. அப்படி வடிவேலு – விஜயகாந்த், தனுஷ் – வடிவேலு, தற்போது அண்மையில் வடிவேலு – ஷங்கர் போன்ற காம்பினேஷன்கள் இனி நடக்கவே நடக்காது என்பது போல சில சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன.
அந்த சம்பவங்களில் ஒன்றுதான் வடிவேலு மீண்டும் அஜித்துடன் இணைந்து படம் நடிக்காமல் இருப்பது. இருவரும் கடைசியாக ராஜா எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்ததில்லை. அதற்கு காரணம் ராஜா படப்பிடிப்பின்போது கதையின் படி வடிவேலுவும் அஜித்தும் நண்பர்கள். அதனால் வடிவேலு அஜித்தை வாடா போடா என்பதுபோல அழைத்து வந்துள்ளார்.
இது அஜித்திற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் வாடா போடா என்பதை தவிர்க்குமாறு இயக்குனர் மூலம் அஜித் வடிவேலுக்கு தெரிவித்தாராம். அதனால், ஷூட்டிங்கின் போது மட்டும் வாங்க போங்க என்பது போல கூப்பிட்டு விட்டு, டப்பிங்கில் வாடா போடா என மாற்றிவிட்டாராம்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் அஜித் – வடிவேலு கூட்டணி மீண்டும் இணையாமல் இருந்துவிட்டது. வடிவேலு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். ஒருவேளை பழைய சம்பவங்களை மறந்து மீண்டும் அஜித் வடிவேலு கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.