#Breaking:ஒமைக்ரான் வைரஸ்:3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம்!

ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்க நாட்டில் பரவி வரும் மரபணு மாறிய கொரோனாவான ஒமைக்ரான் வகை வைரஸானது மீண்டும் உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,சென்னை,கோவை,மதுரை,திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் 12 அரசு ஆய்வகங்களில் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேக்பாத் என்ற கருவியின் உதவியுடன் இந்த 12 அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்தால்,அதன்பின்னர் மரபணு பகுப்பாய்வு செய்யப்படும்.இந்த மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.