டாப் ஸ்டாரின் அடுத்த திரைப்படம்
ஸ்டார் மூவி நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ” ஜானி “. டாப் ஸ்டார் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘சூது கவும்’ ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார் மேலும் இவர்களுடன் பிரபு, ஷாயாஜி ஷிண்டே, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஆத்மா, ஜெயகுமார்,சங்கர் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இக்கதை சஸ்பென்ஸ் த்ரெல்லர் வகையை சார்ந்து எடுக்கபடுகிறது.
இதன் பாடல் காட்சிகள் தவிர மற்ற வசன காட்சிகளுக்கான படபிடிப்பு முழுவதும் 3 கட்டங்களாக முடிவடைந்துள்ளது.
பாடல் காட்சிகளுக்காக படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளது.
இயக்குனர் : வெற்றிசெல்வன் (அறிமுகம்)
DOP : MV.பன்னீர்செல்வம்
ஸ்டன்ட் : சுப்ரீம் சுந்தர்
எடிட்டிங் :சிவா சரவணன்
தயாரிப்பு : தியாகராஜன் – ஸ்டார் மூவிஸ்