இனிமேல் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இனிமேல் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்படும் என மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையாய் அதிகரிக்கும் விதமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள் தோறும் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு மருத்துவ பணியாளர் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.