பெருவில் 800 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு …!
பெருவில் 800 ஆண்டுகள் பழமையான மம்மி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடான பெரு நாட்டில் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை நிலத்தடி கல்லறையிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மம்மி லிமா என்னும் நகரின் புற நகரில் உள்ள நிலத்தடி கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மம்மியின் பாலினம் என்ன என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சான் மார்கோஸ் மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வான் டேலன் லூனா என்பவர் இது குறித்து கூறுகையில், மம்மியின் முக்கிய குணாதிசயம் என்னவென்றால் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப்பட்டு, கைகளால் முகத்தை மூடியபடி இருக்கும். எனவே, இது மிக முந்தைய காலகட்டத்தில் உள்ள ஆண்டில் வாழ்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தென் ஆப்பிரிக்க நாட்டின் கடற்கரைக்கு மலைக்கும் இடையே வளர்ந்த கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரின் உடலாக இது இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
WATCH: A mummy estimated to be at least 800 years old was found in a tomb in Peru https://t.co/eUlCqZxfON pic.twitter.com/ba7h58jjPH
— Reuters Asia (@ReutersAsia) November 28, 2021