இந்த பூக்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைக்காதீர்கள்..!
வாஸ்துப்படி, இந்த பூக்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைக்க கூடாது, அது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பூக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில், அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் பூக்களை வைப்பது நல்லது என்று கருதப்படுகிறது. அதனால்தான் பலர் தங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் பூக்களை நடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மக்கள் செடிகளை வாங்கி வளர்க்க நினைக்கிறார்கள். ஆனால் அவற்றை சரியாக பராமரிக்க முடியாமல், அவை வாடி அல்லது சேதமடைந்து அவற்றின் இலைகள் கருப்பாக மாறிவிடும் நிலைக்கு செல்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி இப்படி கெட்டுப்போன மற்றும் வாடிய பூக்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்திருப்பது நல்லதல்ல. அவை அந்த இடத்தின் அழகைக் கெடுப்பது மட்டுமின்றி, வாஸ்து குறைபாடுகளுக்கும் காரணமாகின்றன. இதனால் பண வரவு குறைகிறது. அதனால் அழுகிய அல்லது காய்ந்த தாவரங்கள் அல்லது இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும். பூக்கள் நன்றாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.