“நான் இன்றும் அதிகாரத்தில் இல்லை;மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே விரும்புகிறேன்” – பிரதமர் மோடி!

Default Image

டெல்லி:எதிர்காலத்தில் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை எனவும்,எனினும்,மக்களுக்காக சேவை செய்ய மட்டுமே தான் விரும்புவதாகவும்,மன் கி பாத் வானொலியின் 83 வது எபிசோடில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் என்பது பிரதமரின் மாதாந்திர வானொலி உரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும்.இந்நிலையில்,மன் கி பாத் வானொலியின் 83 வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி,தான் இன்றும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றும் சேவை மட்டுமே செய்ய  தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“நம் நாடு டிசம்பரில் கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி தினத்தை கொண்டாடுகிறது. டிசம்பர் 16 அன்று, 1971 போரின் பொன்விழா ஆண்டை நாடு கொண்டாடுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இந்தச் சந்தர்ப்பத்தில், எமது ஆயுதப் படைகளை, எமது வீரர்களை நினைவு கூர விரும்புகின்றேன். குறிப்பாக இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களை நினைவு கூர விரும்புகின்றேன் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து,”நண்பர்களே, இப்போது நாம் டிசம்பர் மாதத்திற்குள் நுழைகிறோம், 2021 ஆம் ஆண்டின் அடுத்த ‘மன் கி பாத்’ இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ ஆக இருப்பது இயற்கையானது.2022 இல் மீண்டும் பயணத்தைத் தொடங்குவேன், ஆம் உங்களிடமிருந்து நிறைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்,அதைத் தொடர்ந்து செய்வேன்.

இளம் திறமையாளர்களை வளர்க்கும் தேசிய தொழிற்பயிற்சித் திட்டமானது (NATS) ரூ.73,054 கோடி பயிற்சிக்கான நிதி ஆதரவுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.

நாம் இயற்கையை பாதுகாக்கும் போது, இயற்கையும் நமக்கு பாதுகாப்பு தரும்.இதை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனுபவித்து வருகிறோம்.. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் தீவுகள் பல சமயங்களில் மூழ்கும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.ஆனால்,அங்குள்ள மக்கள் பனை மரங்களை நட்டு வருகின்றனர். அந்த மரங்கள் புயல் சமயத்தில் நிலைத்து நின்று மண்ணைப் பாதுகாக்கின்றன.இந்த செயல் இந்தப் பகுதியை காப்பாற்றுவதில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது” என்று கூறினார்.

மேலும்,கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. எனவே,கொரோனா கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க முடியும்”,என்றார்.

இதனைத் தொடர்ந்து,பல்வேறு விசயங்களை பேசிய பிரதமர்,”நான் இன்றும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.எதிர்காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவும் விரும்பவில்லை.எனினும்,மக்களுக்காக நான் சேவை செய்ய மட்டுமே விரும்புகிறேன். என்னை பொருத்தவரை இந்த பதவி, பிரதமர் என்பதெல்லாம் ஆட்சி அதிகாரம் பற்றிய விஷயமில்லை. இவை சேவைக்கானது மட்டுமே”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்