4-ஆம் நாள் ஆட்டம் ; திணறும் இந்திய அணி..!

இந்திய அணி 32 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து உள்ளனர்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 49 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. தொடக்க வீரராக களமிங்கிய சுப்மன் கில் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப நேற்றைய 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்து 63 ரன்களுடன் முன்னிலையில் இருந்தது.
இன்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்தியா விக்கெட்டை இழந்து வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 22 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையடுத்து மத்தியில் களமிறங்கிய ஜடேஜா முதல் இன்னிங்சை போல நிதான ஆட்டத்தை விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டே பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் இதையடுத்து தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் 18, அஸ்வின் 20 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றன.
இந்திய அணி 32 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து உள்ளனர். இதனால் இந்திய அணி 132 ரன்கள் முன்னிலையில் உள்ளது.