சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் 4-வது முறையாக 1000mm மழை..!
கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஒரே மாதத்தில் சென்னையில் 1000mm மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஒரே மாதத்தில் சென்னையில் 1000mm மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட பதிவில் சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ மழை 4-வது முறையாக பெய்துள்ளதாகவும் அதில், 3 முறை நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது. இந்த மாதம் இன்று இரவு 7.30 வரை சென்னையில் 1000mm மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
1088 மிமீ – நவம்பர் 1918
1078 மிமீ – அக்டோபர் 2005
1049 மிமீ – நவம்பர் 2015
1003 மிமீ – நவம்பர் 2021 (நவம்பர் 27 – இரவு 7.30 வரை)
Chennai records 1000 mm in a month for 4th time for any month and 3rd time in November in 200 years. Shows the intensity of rains this year.
1088 mm – November 1918
1078 mm – October 2005
1049 mm – November 2015
1003 mm – November 2021 (till 27 Nov – 7.30 pm)— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 27, 2021