மசோதா நாளை மறுநாள் மசோதா தாக்கல்: டிராக்டர் பேரணி தள்ளிவைப்பு..!
நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கார்த்திகை தீப திருநாள் அன்று அறிவித்தார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை பல அரசியல் தலைவர்களும், விவசாயிகள் வரவேற்றனர். மேலும், சில கோரிக்கைகளை முன் விவசாயிகள் அதில், விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.
நாளை மறுநாள் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விவசாய சங்கத்தினர் இன்று ஒன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நாளை மறுநாள் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.