மீண்டும் களமிறங்கும் ஆலுமா டோலுமா மாஸ் காம்போ.! தல61 தெறிக்கவிடும் அப்டேட்.!

தல அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவதும், அதனை போனி கபூர் தயாரிக்க உள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
கடந்த 2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடும் மழையிலும் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடலும், தீம் மியூசிக்கும் அதற்கு ஏற்ற தல அஜித்தின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸும் பெரிதும் உதவியது.
தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் பொங்கல் தினத்தன்று சோலோ ரிலீசாக களமிறங்க உள்ளது.
இதற்கு அடுத்தும் தல அஜித் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளாராம். ஆனால் இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை என கூறப்பட்டு வந்தது.
அதனால், இந்த படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என கேட்கப்பட்டு வந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் கேட்கப்பட்டுள்ளதாம். விரைவில், தல அஜித்தின் 61வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை ரிலீஸ் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.