எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய மோடி அவர்கள் அரசு! – அண்ணாமலை

Default Image

எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய மோடி அவர்கள் அரசு என அண்ணாமலை ட்வீட்.

கடந்த அக்.23-ஆம் தேதி நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த 23 மீனவர்கள்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை தமிழக வந்தடைந்தனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த நம்முடைய 23 மீனவ சகோதரர்கள், இலங்கை கடற்படையால் Oct 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். நம்முடைய மத்திய அரசினுடைய சீரிய முயற்சியால் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை 18 சகோதரர்கள் சென்னை வந்து அடைந்திருக்கிறார்கள்!

மீதம் 5 சகோதரர்கள் Covid காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்! பாஜக மீனவர் அணி, தலைவர் சதீஷ் அவர்கள் இன்று காலை அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார்கள்! எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய மோடி அவர்கள் அரசு!’ என்று பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்