ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: புதிய கேப்டன் நியமனம்..!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சில நாட்களுக்கு முன்பு சக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொடர்பாக தகவல் அனுப்பிய புகாரின் பேரில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்யும் நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கம்மின்ஸ்க்கு 28 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போதைய துணை கேப்டனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.