வரி செலுத்துவோரை கண்காணிக்கவும், தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்க அழைப்பு மையம்..!
வரி செலுத்துவோரை கண்காணிக்கவும், தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்கவும், வரி செலுத்த வலியுறுத்தவும் ரூ 5.45 கோடி மதிப்பில் அழைப்பு மையம் உருவாக்கம்.
இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 லட்சத்திற்கும் மேலான வரி செலுத்துவோர் உள்ளனர். இவர்கள் மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்கவும் ஏதுவாக வரி செலுத்துவதை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக 40 பணியாளர்கள் கொண்ட அழைப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக சென்னையில் நிறுவப்படும். இதற்கான தொடர் செலவினம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.5.45 கோடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது