உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்து கொள்ளுங்கள் – டெல்லி முதல்வர்!
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருந்தாலும், தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு சில கட்டுப்பாட்டு தளர்வுகளை அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாடுகளில் புதிதாக பி.1.1.526 எனும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் குறைவான செயல்திறனை தான் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், தென் ஆப்பிரிக்க நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளிலிருந்துபரவி வரும் கொரோனா வைரஸை நம் மாநிலத்திற்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கிறோம். நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
In view of the threat from new COVID variant from African countries, we have requested experts to make a presentation to DDMA on Mon and suggest what steps we shud take. We will take all steps necessary to protect u and ur family
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 26, 2021