வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு….!
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி டில்லி சலோ என்ற அறைகூவல் உடன் விவசாயிகள் போராட்டம் ஒன்றை தொடங்கினார். இந்த போராட்டத்தின் ஆரம்பத்திலேயே மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
அதன் பின் விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் கையிலெடுத்தனர். அவ்வாறு குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட செங்கோட்டை டிராக்டர் பேரணி முற்றுகை வன்முறையில் முடிந்தது. இன்றுடன் இந்த போராட்டம் தொடங்கி ஓராண்டு நினைவு நிறைவு பெறுகிறது.
இதன் காரணமாக டெல்லி எல்லைகளில் கூடியுள்ள ஏராளமான விவசாயிகள் நாடு முழுதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த விவசாயிகளின் போராட்டம் வெற்றியில் தான் முடிந்துள்ளது. அண்மையில் மத்திய அரசு இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.