குட்நியூஸ்…ஆதரவற்ற 38,000 பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்-தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Default Image

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 28.8.2021 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது,ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முப்பத்தி எட்டாயிரம் பெண்களுக்கு எழுபத்தி ஐந்து கோடியே அறுபத்தி மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனித்தா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இந்நிலையில்,ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் 100% மானியத்தில் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,செம்மறி ஆடுகள்,வெள்ளாடுகள் வழங்கும் இந்த திட்டத்திற்காக ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்