குட்நியூஸ்..!தமிழகத்தில் தக்காளி விலை குறைந்துள்ளது!
தமிழகத்தில் ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ரூ.30 அளவில் குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும்.ஏனெனில், தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து பல பகுதிகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதனால்,கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/ வரை குறைவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன்(MT) தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது பல பகுதிகளில் மொத்த விற்பனையில் ரூ.30 என்ற அளவில் குறையத் தொடங்கியுள்ளது.அதன்படி,சென்னை, கோயம்பேடு சந்தையில், நாட்டுத் தக்காளி முதல் ரகம் நேற்றைய விலை ரூ.110 ஆக இருந்த நிலையில்,தற்போது ரூ.80-க்கும், இரண்டாவது ரகம் நேற்றைய விலை ரூ.100 க்கு விற்கப்பட்ட நில்லையில்,தற்போது ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி வரப்பு அதிகரிப்பு,மற்றும் பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை நடைபெறுவதால் தக்காளி விலை குறைந்துள்ளது.