எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை; 27-ஆம் தேதி முடிவு வெளியிடப்படும் – ராகேஷ் திகைத்!
எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை; 27-ஆம் தேதி முடிவு வெளியிடப்படும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்கள் முன்பு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தாலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நவம்பர் 27ஆம் தேதி விவசாயிகள் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். எனவே இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் அவர்கள், இன்னும் எங்கள் போராட்டம் ஓயவில்லை. நவம்பர் 27ஆம் தேதி கூடி முடிவு எடுப்போம். மேலும் விவசாயிகளின் வருமானம் ஜனவரி முதல் இரட்டிப்பாக்கப்படும் எனும் பிரதமரின் வாக்குகள் குறித்து கூட்டத்தில் கலந்து பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.