வேளாண் சட்டம் ரத்து : முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!
வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் காஷ்யப் அவர்கள், முன்னுரிமை அடிப்படையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே வேளாண் சட்டம் ரத்து செய்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.