#BREAKING : எச்சரிக்கை – தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இன்று ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில், வரும் 27,28 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகதெரிவித்துள்ளது. அதுபோல இன்று ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.