#Breaking:தீவிரமடையும் பருவமழை:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.
சென்னை:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக,மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இக்கூட்டத்தில்,அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும்,இக்கூட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்,மீண்டும் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது குறித்து விவாதிக்கபடுவதாக கூறப்படுகிறது.