சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது! – அன்புமணி ராமதாஸ்

மத்திய, மாநில அரசுகளை கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘சமூகநீதியை நிலைநாட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!(3/3)#TNgovt #TNlegislature
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025