கரூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!
கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில், தொடர் மழையின் காரணமாக ஆறுமுகம் என்பவரின் மண் சுவர் வீடு இடிந்து விழுந்ததில் அவரது 11 வயது மகன் சுனில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில், தொடர் மழையின் காரணமாக ஆறுமுகம் என்பவரின் மண் சுவர் வீடு இடிந்து விழுந்ததில் அவரது 11 வயது மகன் சுனில் உயிரிழந்துள்ளார்.மேலும், சுனிலின் சகோரர் ஆகாஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.