முதல்வர் மம்தா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரசில் இணைந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் …!
மேற்கு வங்க முதல்வர் மம்தா முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கீர்த்தி ஆசாத், அசோக் தன்வார் ஆகியோர் திரிணாமூல் காங்கிரசில் இணைந்துள்ளனர்.
ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தி அவர்களின் நெருங்கிய நண்பருமான அசோக் தன்வர் மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகிய இரு காங்கிரஸ் தலைவர்களும் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் முன்னிலையில் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
இதன் பின்பதாக பேசிய கீர்த்தி ஆசாத், பாஜக பிரிவினைவாத அரசியலை செய்கிறது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்த யாராவது தேவைப்படுகிறார்கள். மம்தா பானர்ஜிக்கு அந்த தலைமை இருப்பதாக உணர்கிறேன். எனவே தான் நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.