காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம்!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என தற்பொழுது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழை ஒரு சில நாட்களுக்கு பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.