கோவையில் முதலீட்டாளர் மாநாடு..! ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!
3-வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா.ர் நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், 3-வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.