கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த பழனிசாமிக்கு வீர் சக்ரா விருது..!
கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த ஹவில்தார் பழனிசாமிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனிசாமி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில், ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.
அதேபோல், சீனத்தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார்.