அண்ணாத்த திரைப்படத்திற்கு இல்லாத கட்டுப்பாடு? மாநாடு திரைப்படத்திற்கு மட்டும் ஏன்?!
மாநாடு திரைப்படம் வெளியாகும் இந்த நேரத்தில் திரையரங்கு பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறுவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசு அண்மையில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டதை திரையரங்கு நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்பது போல அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த வாரம் தான் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறுவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தனது மனக்குமுறலை டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
சில வாரங்களுக்கு முன்னர், தீபாவளியை முன்னிட்டு , சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. சிம்புவை விட ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் என உலகமே அறியும். அதேபோல, அண்ணாத்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 30 கோடியை தாண்டி இருந்தது.
திரையரங்கு பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அண்ணாத்த ரிலீஸ் அப்போ கூறியிருந்தால், பெரும்பாலான ரசிகர்கள், திரையரங்கு பார்வையாளர்கள் தடுப்பூசி போட்டிருப்பார்கள். ஆனால், தற்போது, சிம்புவின் மாநாடு படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இந்த அறிவிப்பு ஏன் வந்துள்ளது என ரசிகர்கள் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.