சிலைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்..! உ.பி மருத்துவமனையில் நடந்த வினோத சம்பவம்..! வீடியோ உள்ளே..!
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, கோவில் பூசாரி ஒருவர் கையில் ஒரு பெரிய துணிப்பையில் எதையோ சுருட்டி எடுத்துக் கொண்டு கதறி அழுது கொண்டே மருத்துவமனைக்கு நுழைந்துள்ளார். அதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் என்ன ஆனது என்று பதறிப்போய் விசாரித்தபோது அவர் சொன்ன காரணம் மருத்துவர்களையே சற்று திகைக்க வைத்தது.
அந்தப் பெரியவர் கூறுகையில், தான் தனது வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணரின் கை உடைந்து விட்டதாகவும் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவரை காண வந்ததாகவும் கூறினார்.
அவரது கதறலைக் பார்த்த மருத்துவர்கள் இவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத காரணத்தால் அவரை சமாதானப்படுத்துவதற்காக, ‘ஸ்ரீகிருஷ்ணர்’ என்ற பெயரில் நோயாளியை பதிவு செய்து மருத்துவர்கள் உடைந்த கையை ஒட்டவைத்து அனுப்பினர். இந்த நிலையில் அவர் கதறி அழுது கொண்டே தனது கிருஷ்ணர் சிலைக்கு ஏற்பட்ட நிலை குறித்து சொல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Lekh Singh said he is priest at the Pathwari temple in Arjun Nagar for the past 35 years. “No one took my request seriously at the hospital. I was broken from inside and began crying for my Laddu Gopal,” he said. pic.twitter.com/XuTJFr11yP
— Deepak-Lavania (@dklavaniaTOI) November 19, 2021