எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்த 4 வயது இந்திய சிறுவன்..!

Default Image

எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்த 4 வயது இந்திய சிறுவன்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஸ்வேதா கோலெச்சா – கவுரவ் கோலெச்சா என்ற இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வந்தனர.  இவர்களுக்கு 4 வயதில் அத்விக் என்ற மகன் உள்ளார். அவர்கள் தங்களது மகனுக்கு மலையேறும் பயிற்சிகளை அளிக்க முடிவு செய்த நிலையில் அபுதாபியில் 15 வது மாடியில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்ல படிகளில் ஏற வைத்து பயிற்சிகளை கொடுத்து வந்தன.

இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்ட அத்விக், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்துள்ளார். கடந்த அக்டொபர் 8-ஆம் தேதி மழை ஏற துவங்கி கடந்த 6-ஆம் தேதி, 5,364 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அடித்ததளத்தை அடைந்தார். இதன் மூலம் ஆசியாவிலிருந்து எவரஸ்ட் அடித்தள முகாமை அடைந்த மிகக் குறைந்த வயது நபர் என்ற பெருமையை அத்விக் பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்