நவம்பர் 28-ஆம் தேதி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் …!
நவம்பர் 28-ஆம் தேதி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் வருகிற நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என மக்களவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது இருபத்தி எட்டாம் தேதி பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025