தற்பொழுது வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி!
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாதம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் இது தொடர்பாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், 5 மாநில தேர்தலை மையமாக வைத்துதான் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறாது முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் விவசாய சட்டங்கள் தற்பொழுது திரும்பப் பெற்றுள்ளது ஒரு சந்தர்ப்பவாத செயல் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.