“முதல்வரே…!இதனை உறுதி செய்யுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!
சென்னை:ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது வழக்கம்.ஆனால்,சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 58 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகத்திடம் பேசி இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“சென்னை IITயில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்”,என்று கூறியுள்ளார்.
சென்னை IITயில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) November 21, 2021