‘Yara Birkeland’ – உலகிலேயே முதல் எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் இதுதான்..!
நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணமாகவும், பூமிக்கு மாசுபடுத்தகாத வகையில் கார்பன் புகையை வெளியேற்றாத மின்சார வாகனங்களின் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலை, பிரசித்தி பெற்ற நார்வே நாட்டு நிறுவனமான YARA இந்த கப்பலை KONGSBERG என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது.
இந்த கப்பலானது டீசலில் இயங்கும் கப்பல்கள் மேற்கொள்கின்ற பயணத்தை பெருமளவில் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 27.8 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. இக்கப்பல் வரும் 2022-ஆம் ஆண்டு முதல் கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.