தெலுங்கு பிரமாண்டங்களை கண்டுதான் சூர்யாவின் ET திரைப்படம் தள்ளிப்போனதா?

ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், சூரி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என் படக்குழு அறிவித்துவிட்டது.
சூர்யாவிற்கு தமிழை போல தெலுங்கு சினி உலகிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. சூர்யா படம் நேரடி தெலுங்கு படம் போல வெளியாகும். ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌலியின் RRR திரைப்படம் வெளியாகிறது. ஜனவரி 14ஆம் தேதி பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் மற்றும் பவன் கல்யாணின் பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
ஆதலால், இந்த படங்களுக்கே அங்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என்பதால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்பதால் பிப்ரவரி 4ஆம் தேதியை படக்குழு ரிலீஸ் தேதியாக அறிவித்துவிட்டதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025