#BREAKING: சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி & ஒருவருக்கு அரசு பணி..!

Default Image

சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி & ஒருவருக்கு அரசு பணி என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு ஆய்வாளர் பூமிநாதன் காவல்நிலைய சிறப்பு உதவி 21-11-2021-ம் தேதி அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார். இச்சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து காவல்துறையின் பூமிநாதன். சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்