கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்படுகிறீர்களா? உப்பை இப்படி பயன்படுத்துங்கள்..!
கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தால் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்.
கடன் கொடுத்து விட்டு பலரும் கொடுத்த பணத்தை திரும்ப பெறாமல் ஏன் கொடுத்தோம் என்று புலம்பும் நிலையில் உள்ளனர். பணத்தை வட்டிக்கு கொடுப்பது என்பது எந்த வகையிலும் சரியானது இல்லை. அதிலும் அதிக வட்டிக்கு கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க முடியாமல் அவதியுறுவார்கள். இப்படி கடன் கொடுத்துவிட்டு அதனை வாங்க அலைபவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் கடன் வாங்கியவர்கள் தங்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதால் அவர்களை சபிக்க வேண்டாம். வேண்டுமென்றே தராமல் இருந்தால் அது வேறு. அவர்களிடம் பணவரவு குறைவாக இருந்து உங்களுக்கு கொடுக்கமுடியாமல் இருப்பவர்களை நீங்கள் சபிப்பது தவறு. முதலில் அவர்களிடத்தில் பணவரவு ஏற்பட வேண்டும், அதன்பிறகே உங்களுக்கு அவர்களால் பணத்தை திருப்பி செலுத்த முடியும்.
அதனால் வீட்டில் எளிமையாக உப்பு மற்றும் மஞ்சள் வைத்து செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள். மகாலட்சுமி எங்கும் நிறைந்திருப்பவர். அவர்களது கடாட்சம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அதனால் செவ்வாய் கிழமை அன்று இரவு அரை பக்கெட் தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் ஊற வையுங்கள். மறுநாளான புதன் கிழமையன்று வாசலில் தண்ணீர் தெளிப்பதற்கு இந்த நீரை பயன்படுத்துங்கள்.
வாசலில் தண்ணீர் தெளிக்கும் போது மனதார மகாலெட்சுமி தாயிடம் வேண்டி கொள்ளுங்கள். யார் உங்களுக்கு பணம் தர வேண்டுமோ அவர்கள் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் அதனை எப்படியாவது என்னிடம் வந்து சேர வைத்து விடு தாயே என்று மாகாலெட்சுமி தாயிடம் வேண்டி கொண்டு தண்ணீர் தெளித்து மாக்கோலம் போடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் விரைவில் பணத்தை கொடுக்க நேரிடும். எளிமையான இந்த பரிகாரத்தை வீட்டில் செய்து பலனை பெறுங்கள்.