BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவரா …..!
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இசை வாணி வெளியேற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
நமீதா தானாக வெளியேறிய நிலையில், முதலில் நாதியா சாங், இரண்டாவது அபிஷேக், மூன்றாவது சின்னப்பொண்ணு, நான்காவது ஸ்ருதி அடுத்ததாக மதுமிதா என ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக அபிஷேக் வீட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.