பிரபல பாலிவுட் நடிகைக்கு மிகவும் பிடித்த “மெர்சல்” நடிகர்….!
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் .இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஹாலிவுட்டிலும் மிகவும் பிரபலமானவர் .இவர் நேற்று சமுக வலை தலமான ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் .அதாவது என்னவென்றால் அவர் இளையதளபதி விஜயின் ரசிகை என்று குறிப்பிடுள்ளார் .
மேலும் அவர் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ,கேப்டனும் ஆன விராத் கோலி ரசிகை என்றும் குறிப்பிடுள்ளார்.இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவர் தமிழில் இளைய தளபதி விஜயுடன் இணைந்து “தமிழன்” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.இதை விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.