யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம்; எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் – ஆர்எஸ்எஸ் தலைவர்!

யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம், எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் முங்கேலியில் மூன்று நாள் விழா ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள், நாம் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே பல மதங்களும், தெய்வங்களும் உள்ளன. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்.
யாரையும் மதம் மாற்ற முயற்சிக்காமல், இந்து மதத்தின் போதனைகளை உலகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதாவது மதம் மாற்ற வேண்டும் என்பதைவிட, அனைவருக்கும் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அது தான் தற்போதைய காலத்தில் மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025