குருநானக் ஜெயந்தி : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து ..!

Default Image

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சீக்கியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருநானக் ஜெயந்தியை நேற்று சீக்கியர்கள் கொண்டாடியுள்ளனர். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் அவர்களின் 552 ஆவது பிறந்த தினமான குருநானக் ஜெயந்தி விழாவுக்காக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குருநானக் கூறிய சமத்துவம், அமைதி மற்றும் சேவை பற்றிய தொலைநோக்கு கருத்துக்கள் தற்போதும் முக்கியமானவைகள். குருநானக்கின் போதனைகள் அனைத்து மக்களின் ஒழுக்கம் மற்றும் சமூக உரிமைகள், பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் கொடுத்தால், மதங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்தல் போன்றவற்றை வலியுறுத்துகின்றன.

மேலும் குருநானக்கின் இந்தக் கொள்கைகள் மற்றும் நம்பிக்கையின் படி வாழ்வதன் மூலம் சீக்கியர்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்