தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு …!
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், திருவள்ளூரில் பொது தேர்வு நடைபெற உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.